திருவனந்தபுரம்: நீருக்கடியில் யோகா செய்து அசத்திய ராணுவ வீரர்கள்


திருவனந்தபுரம்: நீருக்கடியில் யோகா செய்து அசத்திய ராணுவ வீரர்கள்
x

திருவனந்தபுரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நீருக்கடியில் யோகா செய்து அசத்தியுள்ளனர்.

திருவனந்தபுரம்,

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் 9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் இருந்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் யோகா பயிற்சி செய்யும் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நீருக்கடியில் யோகா செய்து அசத்தியுள்ளனர். இந்திய தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் மூவர்ணங்களில் உடைகள் அணிந்து ராணுவ வீரர்கள் யோகாசனம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



1 More update

Next Story