நமது இடத்தை ஏற்கனவே சீனா ஆக்கிரமித்து விட்டது: மெகபூபா முப்தி


நமது இடத்தை ஏற்கனவே சீனா ஆக்கிரமித்து விட்டது: மெகபூபா முப்தி
x

பாஜக எம்.பி பாராளுமன்றத்தில் கூறியதைப் போல நமது இடங்களை சீனா ஆக்கிரமித்து இருப்பதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

எல்லையில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் விவகாரம் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கூறியிருப்பதாவது:- லடாக் மற்றும் அருணாசல பிரதேசத்தில் உள்ள நமது இடங்களை சீனா ஆக்கிரமித்து விட்டதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

பாஜக எம்.பியும் பாராளுமன்றத்தில் இதைத்தான் சொல்லி இருக்கிறார். ஆனால், பாஜக எதையுமே செய்யவில்லை. நமது வீரர்கள் தாக்கப்பட்டு இருக்கின்றனர். திருப்பி அடிப்பதற்கு நமது வீரர்களுக்கு அனுமதிகொடுக்கப்படவில்லை. இதுதான் மிகவும் வருத்தமான நிலையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story