தனது தயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்
அம்மாவுக்கு நான் ஒரு துணையைக் கண்டுபிடித்தேன், நானும் ஒரு அப்பாவைக் கண்டறிந்தேன் என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.
மும்பை
மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி என்ற பெண் தனது தாயார் மவுசுமிக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார்.
ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி இன்ஸ்டாகிராமில் கியூமன்ஸ் ஆப் பாம்பேவில் கிரப்பட்ட கதையில் ரியா மற்றும் அவரது தாயார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கணவரின் மறைவுக்குப் பிறகு தனது வாழ்க்கையில் வேறு ஒருவரிடம் தனது மனதை திறக்கும்போது அவரது தாயார் எதிர்கொள்ளும் மனத் தடைகளை அது விவரிக்கிறது.
இதுகுறித்து ரியா கூறி இருப்பதாவது:-
அப்பா இறந்த பிறகு, அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு குடிபெயர்ந்தேன், நான் அங்கு வளர்ந்தேன், எனக்கு 2 வயது, அப்போது அம்மாவுக்கு 25 வயது. 'நீ மறுமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் எனது தயார் மறுத்து விட்டார். நான் திருமணம் செய்து கொண்டால் எனக்கு அன்பு கிடைக்கும் ஆனால் என் மகளுக்கு ஒரு தந்தை கிடைக்க மாட்டார் என்று கூறுவார்"
தற்போது அம்மாவுக்கு நான் ஒரு துணையைக் கண்டுபிடித்தேன், நானும் ஒரு அப்பாவைக் கண்டறிந்தேன் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். அம்மா இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள், அது என்னை மிகவும் மகிழ்ச்சியாக்குகிறது" என்று கூறி உள்ளார்.
இந்த இடுகை 80,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.