பொங்கல் பண்டிகை: சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1,000 வழங்கப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 4ம் தேதி, பொங்கல் பண்டிகை பரிசாக தலா ரூ. 1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி,
பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு இன்று அறிவித்துள்ளது. புதுச்சேரியில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 791 சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 4ம் தேதி தலா ரூ. 1,000 வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் தொகை செலுத்தப்படும் என புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story