திருநங்கைகள் போல் வேடமணிந்து இளம்பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது!


திருநங்கைகள் போல் வேடமணிந்து இளம்பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த கும்பல் கைது!
x

கைதான மூன்று நபர்களும் ஆண்கள் என தெரியவந்துள்ளது.

மும்பை,

திருநங்கைகள் போல் வேடம் அணிந்து இளம்பெண்ணிடம் கொள்ளையடித்த மூன்று நபர்களை மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெண்கள் போல் ஆடை அணிந்து ஒரு பெண்ணை பயமுறுத்தி, அவரிடம் இருந்த குழந்தைக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு உள்ளது என்று சொல்லி அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்து நகைகளை பறித்துள்ளனர்.

கைதான மூன்று நபர்களும் ஆண்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் 28 வயதான ஒரு பெண்ணின் வீட்டை அடைந்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். அந்த பெண்ணுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்துள்ளது இந்த விவரத்தை அறிந்த பின் அவர்கள் அங்கு சென்று மிரட்டி திருடிச்சென்று உள்ளனர்.

அந்தப் பெண்ணிடம் அவருடைய குழந்தைக்கு உடல் நலம் பெற வேண்டும் என்றால் சில பூஜைகள் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி அந்த பெண்ணிடம் இருந்த தங்க நகைகள் அனைத்தையும் மஞ்சள் பொதிந்த காகிதத்தில் மடித்து வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இவ்வாறு செய்தால் அந்த குழந்தைக்கு தீங்கு எதுவும் ஏற்படாது என்று கூறியுள்ளனர். அந்த பெண்ணும் பயத்தில் அவர்கள் கூறியபடி செய்துள்ளார்.

அதன்பின் அவர்கள் அந்த காகித மூட்டையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இந்த விவரத்தை அறிந்த அந்த பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பின் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அந்த மூவரும் மும்பையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புல்தானா பகுதியில் இருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ள விவரம் மற்றும் வீட்டின் முகவரி உள்ளிட்டவற்றை மருத்துவமனை மூலம் அவர்கள் அறிந்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story