கல்லூரியில் ஏடிஎம், ஜிம் அமைக்கக்கோரி தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவிகள்
கல்லூரியில் ஏடிஎம், ஜிம் அமைக்கக்கோரி தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அரசு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் வரும் 26-ம் தேதி மாணவர் யூனியன் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு முன்பாக கல்லூரி வளாகத்தில் ஏடிஎம் மையம், ஜிம் (உடற்பயிற்சி கூடம்) அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து 3 மாணவிகள் கல்லூரியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கும் மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கல்லூரியில் ஏடிஎம், ஜிம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவிகளிடம் பெற்றோர், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 3 மாணவிகளும் தற்கொலை முடிவை கைவிட்டு தண்ணீர் தொட்டில் இருந்து கிழே இறங்கினர்.
Related Tags :
Next Story