16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகர்தலா,

திரிபுரா மாநிலம் உனாகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் அளித்த புகாரில், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் பெண் தன் மகளை கடந்த 19-ம் தேதி உனாகோட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாநில பாஜக மந்திரியின் மகனுக்கு தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. திரிபுராவில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story