வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் திப்பாரெட்டி எம்.எல்.ஏ. முன் நிர்வாணமாக தோன்றிய இளம்பெண்


வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் திப்பாரெட்டி எம்.எல்.ஏ. முன் நிர்வாணமாக தோன்றிய இளம்பெண்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் திப்பாரெட்டி எம்.எல்.ஏ. முன் நிர்வாணமாக தோன்றி இளம்பெண் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்ரதுர்கா;


பா.ஜனதா எம்.எல்.ஏ.

சித்ரதுர்கா(மாவட்டம்) சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் திப்பாரெட்டி. 75 வயதான இவர் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவரது செல்போனுக்கு ஒரு இளம்பெண் வாட்ஸ்-அப் மூலம் நிர்வாண வீடியோ கால் செய்ததாகவும், தன்னுடைய ஆபாச வீடியோக்களையும் அனுப்பியதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது கடந்த மாதம்(அக்டோபர்) 31-ந் தேதி திப்பாரெட்டி எம்.எல்.ஏ.வின் செல்போனுக்கு ஒரு இளம்பெண் தொடர்பு கொண்டு பேசினார். முதலில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த அந்த இளம்பெண், பின்னர் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் பேச வேண்டும் என்று கூறினார்.

நிர்வாணமாக தோன்றினார்

அவர் கூறியதை ஏற்ற திப்பாரெட்டி எம்.எல்.ஏ. வீடியோ கால் மூலம் பேச அனுமதி அளித்தார். அதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் திப்பாரெட்டியின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டார். அந்த அழைப்பை திப்பாரெட்டி எம்.எல்.ஏ.வும் எடுத்து பேசினார். இந்த நிலையில் அந்த இளம்பெண் வீடியோ அழைப்பில் நிர்வாணமாக தோன்றினார். மேலும் அந்த இளம்பெண் இந்தியில் பேசி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திப்பாரெட்டி எம்.எல்.ஏ. உடனே அந்த அழைப்பை துண்டித்துள்ளார். பின்னர் அதே செல்போன் எண்ணில் இருந்து திப்பாரெட்டி எம்.எல்.ஏ.வுக்கு ஏராளமான ஆபாச வீடியோக்கள் வந்துள்ளன.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

இதையடுத்து அந்த வீடியோக்களை அழித்த திப்பாரெட்டி எம்.எல்.ஏ., அந்த செல்போன் எண்ணையும் 'பிளாக் லிஸ்ட்' எனப்படும் கருப்பு பட்டியலில் சேர்த்தார். பின்னர் இதுபற்றி அவர் சித்ரதுர்கா சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி திப்பாரெட்டி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், 'என்னை ஹனி டிராப் முறையில் சிக்க வைக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் அது நடக்காது. எனக்கு எதிரான சதிகளை நான் முறியடிப்பேன்' என்று கூறினார்.

பரபரப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவைச் சேர்ந்த மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி இதேபோல் ஹனி டிராப் முறையில் சிக்கினார். இதனால் அவர் தனது மந்திரி பதவியை இழந்தார். அதையடுத்து ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகாவில் உள்ள கஞ்சுகல் பண்டே மடத்தின் மடாதிபதி பசவலிங்கசுவாமி என்பவரும் இதேபோல் ஹனி டிராப்பில் சிக்கி தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது திப்பாரெட்டி எம்.எல்.ஏ.வை குறிவைத்து இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story