எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்காதது ஏன்? -பரபரப்பு தகவல்


எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்காதது ஏன்? -பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 24 May 2022 5:10 PM GMT (Updated: 24 May 2022 5:19 PM GMT)

கர்நாடக மேல்-சபை தேர்தலில் எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்காதது ஏன்? என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபை தேர்தலில் எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்காதது ஏன்? என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடும் அதிருப்தி

கர்நாடக மேல்-சபை தேர்தலில் போட்டியிட எடியூரப்பா மகன் விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்குமாறு கட்சி மேலிடத்திற்கு கர்நாடக பா.ஜனதா பரிந்துரை செய்தது. இதன் மூலம் அவர் பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் இதையே கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தினார். அதனால் விஜயேந்திராவுக்கு டிக்கெட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததை கண்டு எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

பா.ஜனதா மேலிடம் வருகிற சட்டசபை தேர்தலை மனதில் வைத்து வால்மீகி, ஆதிதிராவிடர், லிங்காயத் சமூகங்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக பேசப்படுகிறது. எடியூரப்பா சிகாரிபுரா எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவரது மூத்த மகன் ராகவேந்திரா சிவமொக்கா எம்.பி.யாக இருக்கிறார். இந்த நிலையில் விஜயேந்திராவை எம்.எல்.சி. ஆக்கினால் பிரதமர் மோடியின் குடும்ப அரசியலுக்கு எதிரான நிலைப்பாடு பலவீனமாகும் என்று கருதி விஜயேந்திராவுக்கு பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு வழங்காமல் நிராகரித்துள்ளது.

முக்கிய பொறுப்பு

அதே நேரத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் விஜயேந்திராவுக்கு டிக்கெட் வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பு கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். எடியூரப்பாவுக்கு பதிலாக சிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரா நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.


Next Story