திருப்பதி: பிரம்மோற்சவ விழாவில் வாகனங்கள் தூக்குபவர்களுக்கு வஸ்திரம்...!


திருப்பதி: பிரம்மோற்சவ விழாவில் வாகனங்கள் தூக்குபவர்களுக்கு வஸ்திரம்...!
x

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வாகனங்கள் தூக்குபவர்களுக்கு வஸ்திரங்களை அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடக்கின்றன. அதில் உற்சவர்கள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். கோவிலில் வாகனங்களை தூக்கிச் செல்லும் ஊழியர்களாக 80 பேர் உள்ளனர். அவர்கள் பிரம்மோற்சவ விழாவின்போது பல்வேறு வாகனங்களை சுமந்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவிலில் வாகனங்கள் தூக்குபவர்களை கவுரவிக்கும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, அவர்களுக்கு திருமலையில் உள்ள வைபவ மண்டபத்தில் வஸ்திரங்களை வழங்கினார்.

தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த தங்கதுரை என்ற பக்தர், அந்த வஸ்திரங்களை அறங்காவலர் குழு தலைவரிடம் கொடுத்து வினியோகித்தார்.


Next Story