மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஊழலின் சிகரமாக திகழ்கிறது - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்


மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஊழலின் சிகரமாக திகழ்கிறது - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
x

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஊழலின் சிகரமாக திகழ்வதாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி உள்ளார்.

புதுடெல்லி,

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஊழலின் அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் ஏஎன்ஐ செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஊழலின் சிகரமாக திகழ்வதாக தெரிவித்தார்.

மம்தா பானர்ஜியின் அரசிலும், கட்சியிலும் ஊழல் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறிய அவர், மம்தாவின் மந்திரிகள் சுதந்திரமாக ஊழல்களை புரிவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் மம்தா பானர்ஜியும் ஊழல் பதிவுகளை முறியடிக்கும் போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது என்று தாக்கூர் கூறினார்.

மேற்கு வங்காளத்தில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அம்மாநில தொழில் துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story