சப்-இன்ஸ்பெக்டர்களின் சிறந்த பயிற்சி மையமாக தமிழ்நாடு போலீஸ் அகாடமி தேர்வு - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு


சப்-இன்ஸ்பெக்டர்களின் சிறந்த பயிற்சி மையமாக தமிழ்நாடு போலீஸ் அகாடமி தேர்வு - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
x

சப்-இன்ஸ்பெக்டர்களின் சிறந்த பயிற்சி மையமாக தமிழ்நாடு போலீஸ் அகாடமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு போலீஸ் அகாடமி செயல்படுகிறது. இங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் உள்ள வசதி-வாய்ப்புகள், கட்டமைப்பு மற்றும் பயிற்சி அளிக்கும் முறை போன்றவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வல்லுனர் குழுவினர் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். ஆண்டுதோறும் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் உள்ள பயிற்சி மையங்களை இதுபோல ஆய்வு செய்து, சிறந்த பயிற்சி மையத்தை தேர்வு செய்து அறிவிப்பார்கள்.

அந்த வகையில் நடந்த ஆய்வின் அடிப்படையில், கடந்த 2022-ம் வருடத்தின் சிறந்த பயிற்சி மையமாக தமிழ்நாடு போலீஸ் அகாடமி பயிற்சி மையத்தை தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சரின் சுழற்கேடயம் மற்றும் ரூ.20 லட்சம் மானிய ஊக்கத்தொகையை உள்துறை அமைச்சகம் வழங்க உள்ளது.

மேற்கண்ட தகவல் போலீஸ் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story