புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை: ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை


புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை: ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை
x

தக்காளி விலை புதிய உச்சம் தொட்டது இதன்படிஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புதுடெல்லி,

பருவமழையின் எதிரொலியால் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று தக்காளி விலை புதிய உச்சம் தொட்டது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தின் ஹாபூர் நகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.250-க்கு விற்பனையானது.

அகில இந்திய அளவில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.117 ஆக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையேற்றத்தால் அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக டெல்லி, பாட்னா, லக்னோ போன்ற நகரங்களில் ஒரு கிலோ தக்காளியை ரூ.90-க்கு மத்திய அரசு விற்பனை செய்தது.

1 More update

Next Story