ரெயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரித்துள்ளதாக தகவல்


ரெயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்வது அதிகரித்துள்ளதாக தகவல்
x

ரெயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

மின் நிலையங்களுக்கு மின்சாரம் தயாரிப்பதற்காக வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து நிலக்கரி அனுப்பப்படுகிறது. இவைகள் ரெயில்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றது இந்த நிலக்கரி போக்குவரத்து கடந்த மே மாதம் மட்டும் 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் தற்போது 0.263 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி மின் நிலையங்களுக்கு ரெயில் மூலம் வந்து சேர்ந்துள்ளது.

மேலும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெற்கு ரயில்வே முதல் முறையாக 3.621 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும். இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தெற்கு ரயில்வே 6.857 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு உள்ளது.

கடந்தாண்டு 5.323 மில்லியன் டன் சரக்குகளையே கையாண்டு உள்ள நிலையில், இந்த ஆண்டு 29 சதவீதத்திற்கும் அதிகமான சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. நிலக்கரி, இரும்பு, சிமெண்ட், உணவுப் பொருட்கள், உரம், பெட்ரோலிய பொருட்கள், பெட்டகங்கள் ஆகியவை ரயில் மூலம் கையாளப்பட்ட முக்கிய சரக்குகளாகும். இதில் இந்தாண்டு நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது அதிகரித்துள்ளதாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story