இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு மந்திரிக்கு முப்படையின் அணிவகுப்பு மரியாதை


இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு மந்திரிக்கு முப்படையின் அணிவகுப்பு மரியாதை
x
தினத்தந்தி 5 Jun 2023 6:26 AM GMT (Updated: 5 Jun 2023 7:14 AM GMT)

அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்ட் ஆஸ்டினுக்கு இன்று புதுடெல்லியில் முப்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்ட் ஆஸ்டின் 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளார். ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவுக்கு நேற்று வருகை தந்து உள்ளார்.

இதனை முன்னிட்டு, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி அவரை முறைப்படி வரவேற்றார். பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்காக முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு திரும்ப வந்து உள்ளேன் என ஆஸ்டின் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு புதுடெல்லியில் இன்று முப்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை அவர் ஏற்று கொண்டார்.

அதன்பின் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கை அவர் இன்று சந்தித்து பேசினார். அவரது இந்த பயணத்தில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்புக்கான தொடக்க நடவடிக்கைகள் மற்றும் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே செயல்பாட்டு ஒத்துழைப்பை விரிவாக்கும் முயற்சிகளை தொடருவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

பிரதமர் மோடி, நடப்பு ஜூனின் 2-வது வாரத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்ட் ஆஸ்டினின் இந்திய வருகை முக்கியத்துவம் பெறுகிறது.


Next Story