சிக்கமகளூருவில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது


சிக்கமகளூருவில் 12 வயது சிறுமியை  பலாத்காரம் செய்ய முயன்ற  தந்தை கைது
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM GMT (Updated: 22 July 2023 6:45 PM GMT)

சிக்கமகளூருவில் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிக்கமகளூரு-

ஒன்னள்ளி தாலுகாவில் 12 வயது சிறுமியை தந்தையே பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

12 வயது சிறுமி

தாவணகெரே மாவட்டம் ஒன்னள்ளி தாலுகா மாலேபென்னூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு திருமணமாகி மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

நேற்றுமுன்தினம் அந்த தொழிலாளி மகளை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்வதாக மனைவியிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அதன்பேரில் அந்த தொழிலாளி தனது மகளை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு புறப்பட்டார்.

கைது

மலைப்பகுதிக்கு சென்ற அவர் அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பெற்ற மகள் என்றும் பாராமல் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி கூச்சல் போட்டாள். இதையடுத்து அங்கு சிலர் உடனடியாக வரவே அந்த தொழிலாளி தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

வீட்டுக்கு வந்த அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி கதறி அழுதாள். உடனே சிறுமியின் தாய் இதுபற்றி மாலேபென்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story