மாநிலங்களவை எம்.பி.யாக பிப்லவ் குமார் பதவியேற்பு


மாநிலங்களவை எம்.பி.யாக பிப்லவ் குமார் பதவியேற்பு
x

மாநிலங்களவை எம்.பி.யாக பிப்லவ் குமார் நேற்று பதவியேற்றார்.

புதுடெல்லி,

திரிபுராவில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வந்த மாணிக் சாஹா கடந்த மே மாதம் அம்மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார்.

அதை தொடர்ந்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட திரிபுராவின் முன்னாள் முதல்-மந்திரி பிப்லவ் குமார் தேவ் வெற்றிப்பெற்றார்.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற பிப்லவ் குமார் தேவ் நேற்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். அதேபோல் ஜம்மு-காஷ்மீரில் இருந்து பா.ஜ.க. சார்பில் நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட குலாம் அலி கட்டானாவும் எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். இருவருக்கும் மாநிலங்களவை அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜகதீப் தன்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


Next Story