ரெயில்வே உயர் அழுத்த மின்கம்பி மீது மோதி தீப்பிடித்த லாரி: ரெயில், வாகன போக்குவரத்து சேவைகள் பாதிப்பு
7 மணிநேரம் ரெயில் மற்றும் வாகன போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
சக்தி,
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள பரத்வார் ரயில் நிலையம் அருகே லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சக்ரேலி கேட்டில் ரெயில்வே உயர் அழுத்த மின்கம்பி மீது மோதி தீப்பிடித்தது.
இதன் காரணமாக சக்ரேலி ரெயில் பாதையிலும், அதன் அருகில் இருந்த தேசிய நெடுஞ்சாலையிலும் சுமார் 7 மணிநேரம் ரெயில் மற்றும் வாகன போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தகவலறிந்த் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்து தீயை அணைத்தனர். பின்னர் ஜேசிபி மூலம் லாரி அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
Related Tags :
Next Story