லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி பலி


லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி பலி
x

கலபுரகியில் லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: தொழிலாளி உயிரிழந்தார்.

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் உனசகி தாலுகாவை சேர்ந்தவர் மடனசாபமுல்லா (வயது 41). தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அவர் தலிகோட்டை சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரி, அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அவரது மனைவி உனசகி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story