செல்லக்கெரேயில் வீடு புகுந்து திருடிய வழக்கில் 2 பேர் கைது
செல்லக்கெரேயில் வீடு புகுந்து ரூ.2½ தங்க நகைகளை திருடி சென்ற வழக்கில் 2 பேர் கைது
சிக்கமகளூரு;
சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே தாலுகா விட்டலாநகர் பகுதியை சேர்ந்தவா் மாலதேஸ். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி மாலதேஸ், வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் யாரோ மர்மநபர்கள் மாலதேசின் வீட்டில் புகுந்து ரூ.2½ லட்சம் தங்கநகைகளை திருடி தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மாலதேஸ் கொடுத்த புகாரின் பேரில் செல்லக்கெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் புகுந்து திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் துமகூரு மாவட்டம் ஹன்தகெரே கிராமத்தை சேர்ந்த சிவண்ணா (வயது 29), செல்லகெரே தாலுகா காந்திநகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (30) என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.