வங்கி ஊழியர்கள் 30, 31-ந் தேதிகளில் வேலைநிறுத்தம்


வங்கி ஊழியர்கள் 30, 31-ந் தேதிகளில் வேலைநிறுத்தம்
x

கோப்புப்படம்

வங்கி ஊழியர்கள் 30 மற்றும் 31-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். இதனால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை பாதிக்கப்படும்.

மும்பை,

வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. அதில், இம்மாதம் 30 மற்றும் 31-ந் தேதிகளில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இம்மாதம் 28-ந் தேதி 4-வது சனிக்கிழமை என்பதாலும், 29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை நாட்கள் ஆகும். அதைத்தொடர்ந்து, 30, 31-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் நடப்பதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

வேலைநிறுத்தம் குறித்து வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு துணை பொதுச்செயலாளர் நரேந்திர சவுகான் கூறியதாவது:-

சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தில் மாற்றம், தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், புதிய ஊழியர்கள் தேர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.

இந்த கோரிக்கைகளை இந்திய வங்கிகள் சங்கம் புறக்கணித்ததால், வேலைநிறுத்தத்தை தவிர வேறு வழி இல்லை என்று அவர் கூறினார்.


Next Story