திருமண விழாவில் பங்கேற்று திரும்பியபோது சோகம்; மணமக்கள் பயணித்த கார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!


திருமண விழாவில் பங்கேற்று திரும்பியபோது சோகம்; மணமக்கள் பயணித்த கார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!
x

அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து அப்பளம் போல நொறுங்கியது.

ஸ்ரீநகர்,

ஜம்மு- காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பயணித்த வாகனம் சாலையில் சறுக்கி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

ஹிக்னி-பதர்கூட் பெல்ட்டின் இணைப்பு சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அதிவேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்து அப்பளம் போல நொறுங்கியது.

அந்த காரில் மணமகன் மற்றும் மணமகள் உட்பட உறவினர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கார் கவிழ்ந்தது.

இறந்தவர்கள் ஜாஹிதா பேகம் மற்றும் முஷ்டாக் அகமது, ஹசா பேகம் மற்றும் அப்துல் ரஷீத் என அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஷகன் ராம்சூவைச் சேர்ந்த ஷானாசா பேகம் மற்றும் முஷ்டாக் அகமது ஆகிய இருவர் அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மணமக்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு முன்னர், இந்த விபத்து நடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story