மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை; பிரதமர் மோடி புதிய இந்தியாவின் தந்தை - அம்ருதா பட்னாவிஸ்
மகாந்தமா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இந்தியாவின் தேச தந்தைகள் என மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸின் மனையி அம்ருதா பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ். அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான இவர் பல்வேறு விழாக்களில் அதிகம் கலந்துகொள்வார்.
சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் போர்க்கப்பலை பார்வையிடச் சென்றபோது கப்பலின் ஓரத்தில் பாதுகாப்பு எதுவுமின்றி புகைப்படம் எடுத்த சம்பவத்தின் மூலம் இவர் இந்தியப் பிரபலம் ஆனார்.
இந்தநிலையில், துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸின் மனையி அம்ருதா பட்நாவிஸ் அண்மையில் தேசத்தந்தை பற்றிய கருத்தை வெளியிட்டுளளார். அதில், நமது நாட்டிற்கு இரு தேச தந்தைகள் இருக்கிறார்கள் என கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நமது நாட்டிற்க்கு தேச தந்தை என்றால் அது மஹாத்மா காந்தி. அதே போல புதிய இந்தியாவின் தந்தை என்றால் அது நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. என இந்தியாவுக்கு 2 தேச தந்தைகள் இருக்கிறார்கள் என தனது கருத்தை கூறியுள்ளார்.