சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை


சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை
x

இரண்டு மைனர் தலித் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

லக்கிம்பூர்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் பட்டியலினத்தை சார்ந்த இரு சகோதரிகளின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி கிராம மக்கள் மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி கிராம மக்களும் சிறுமிகளின் குடும்பத்தினரும் பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறுமிகள் கொலை வழக்கில், மூன்று பேர் அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து லக்கிம்பூர் கேரி போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் சுமன், போலீஸ் படையுடன் போராட்ட இடத்திற்கு விரைந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் சூப்பிரண்டு சஞ்ஜீவ் சுமன், இந்த கொலை வழக்கு தொடர்பாக சுஹேல், ஜூனைது, ஹபிசுல் ரெஹ்மான், ஹரிமுதீன், மற்றும் ஆரிப் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 6வதாக கைது செய்யப்பட்ட சோட்டு என்பவர் அந்த சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் தான் மற்றவர்களிடம் அந்த சகோதரிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர். இந்த இரு சிறுமிகளையும் பக்கத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர் கூறினார்.


Next Story