கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி விபத்து: போலீஸ் அதிகாரி, மனைவி உயிரிழப்பு


கர்நாடகாவில் லாரி மீது கார் மோதி விபத்து:  போலீஸ் அதிகாரி, மனைவி உயிரிழப்பு
x

கர்நாடகாவில் லாரி மீது கார் மோதியதில் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெங்களூரு,

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அவர்கள் பயணித்த கார் அதிவேகமாக வந்து திடீரென கண்டெய்னர் மீது மோதியதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு பேர் சிந்துகி காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அவரது மனைவி மது என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நடந்த சில மணி நிமிடத்தில் பொதுமக்கள் முயற்சி செய்து காரில் இருந்து உடலை வெளியே எடுத்தனர். உயிரிழந்த 2 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நெலோகி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story