இரு ரெயில்கள் மோதி விபத்து: ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி முக்கிய உத்தரவு!
ரெயில் விபத்து நடந்த பகுதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
விஜயநகரம்,
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரெயில் மீது பலாசா பயணிகள் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் பயணிகள் ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ரெயில் விபத்து நடந்த பகுதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story