சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்


சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
x

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 12-ந்தேதி கத்தியால் குத்தப்பட்டார்.

புதுடெல்லி,

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 12-ந்தேதி கத்தியால் குத்தப்பட்டார். அதற்கு உலகம் முழுவதும் கண்டனம் எழுந்தது.

இந்தநிலையில், இந்தியா முதல்முறையாக கண்டனம் தெரிவித்தது. மத்திய ெவளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி தனது வாராந்திர பேட்டியின்போது கூறியதாவது:-

இந்தியா எப்போதும் வன்முறை மற்றும் அடிப்படைவாதத்துக்கு எதிராகவே இருக்கிறது. சல்மான் ருஷ்டி மீதான பயங்கர தாக்குதலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story