அபுதாபியில் முதல் இந்து கோவில்.. 14-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி


அபுதாபியில் முதல்  இந்து கோவில்.. 14-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
x

அபுதாபியில் முதல் இந்துக் கோவில் வரும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது. அபுதாபி பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இந்தக் கோவிலை திறந்து வைக்கிறார்.

அபுதாபியில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பின் பிரமாண்ட இந்து கோவில் வருகிற 14-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த கோவிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். அதற்கு முதல் நாள் 13-ந் தேதி இந்திய மக்களை சந்திக்கும் அஹ்லன் மோடி என்ற தலைப்பில் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, இந்தியா-அமீரகம் இடையிலான கலாசாரங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அந்த மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் இந்திய மக்களிடையே உரையாற்றுகிறார்.


Next Story