உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது - யூ.ஜி.சி.

உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது - யூ.ஜி.சி.
x

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை யூ.ஜி.சி. வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை யூ.ஜி.சி. வெளியிட்டுள்ளது.

அதன்படி, கல்வி நிறுவனம் சார்பில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும்.

மாணவிகளுக்கு அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்கள் வழங்க வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை 2022 அடிப்படையில் தொழில் முனைவோர்களாக பெண்களை மாற்றுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை ஏற்படுத்தித் தர வேண்டும்.

மாணவிகளுக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெண் காவலர்களை பணி அமர்த்த வேண்டும்.

பாலியல் தொந்தரவு குறித்த விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். என உயர்கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை யூ.ஜி.சி. வெளியிட்டுள்ளது.

Next Story