உக்ரைன் போர் குறித்து ஐ.நா.வில் தீர்மானம்வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா


உக்ரைன் போர் குறித்து ஐ.நா.வில் தீர்மானம்வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
x

உக்ரைனில் இருந்து ரஷிய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நியூயார்க்,

உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து ரஷிய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதை தொடர்ந்து, உக்ரைனில் விரிவான, நியாயமான, நீடித்த அமைதிக்கான சூழலை விரைவில் உருவாக்குவது தொடர்பான இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

விவாதத்தைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 141 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

இந்தியா வாக்களிப்பை புறக்கணித்தது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதர் ருசிரா கம்போஜ் கூறுகையில், "இன்றைய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களை நாம் கவனத்தில் கொள்ளும்போது, நிலையான அமைதியைப் பாதுகாப்பதற்கான நாம் விரும்பிய இலக்கை அடைவதில் அதன் உள்ளார்ந்த வரம்புகளைக் கருத்தில் கொண்டு, நாம் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே சமயம் பேச்சுவார்த்தை மற்றும் தூதரகத்தின் பாதைக்கு திரும்புவதே முன்னோக்கி செல்லும் ஒரே வழி என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது" என்றார்.


Next Story