சிக்கமகளூரு பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்கப்படும்; நகரசபை தலைவர் வேணுகோபால் உறுதி


சிக்கமகளூரு பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்கப்படும்; நகரசபை தலைவர் வேணுகோபால் உறுதி
x

சிக்கமகளூரு டவுனில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்கப்படும் நகரசபை தலைவர் வேணுகோபால் உறுதி

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் பகுதியில் இருந்து தரிகெரே செல்லும் சாலையில் சிருங்கார் சர்க்கிள் பகுதியில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை இல்லை என கூறப்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் நிற்கும் அவலம் உள்ளது.


இதேபோல் கடூர் செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் உள்ள பஸ் நிலையத்திலும் மேற்கூரை இல்லை என தெரிகிறது. மேலும், சிக்கமகளூரு நகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை இல்லை என அந்த பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.


மேலும் அவர்கள் நகரசபை தலைவரிடம் பயணிகள் வசதிக்காக நிழற்குடைகள் அமைத்து கொடுக்க வலியுறுத்தினர். இதுதொடர்பாக சிக்கமகளூரு நகரசபை தலைவர் வரசித்தி வேணுகோபால் கூறியதாவது:-

சிக்கமகளூரு-பெங்களூரு நெடுஞ்சாலை பேளூர் பகுதி மற்றும் ஹரேமகளூருவில் உள்ள கோட்டை பகுதிகளில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நிழற்குடைகள் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு பயணிகளின் வசதிக்கு நகரசபைக்குட்பட்ட பஸ் நிறுத்தங்களில் மேற்கூரைகள் அமைத்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story