'துரதிர்ஷ்டவசமானது' கேரளாவில் அடித்து நொறுக்கப்பட்ட தனது அலுவலகம் சென்ற ராகுல் காந்தி பேட்டி


துரதிர்ஷ்டவசமானது கேரளாவில் அடித்து நொறுக்கப்பட்ட தனது அலுவலகம் சென்ற ராகுல் காந்தி பேட்டி
x
தினத்தந்தி 1 July 2022 1:35 PM GMT (Updated: 2022-07-01T19:20:53+05:30)

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் இன்று பார்வையிட்டார்.

திருவனந்தபுரம்,

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார். வயநாட்டில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்தை கடந்த 24 ஆம் தேதி அடித்து நொறுக்கின்றர். இந்திய மாணவர் சங்கத்தினரே அலுவலகத்தை அடித்து நொறுக்கியது தெரியவந்தது. தாக்குதலில் அலுவலகம் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பு (எஸ்எஃப்ஐ) தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் பார்வையிட்டு கட்சியினருடன் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறுகையில், " இந்த அலுவலகம் வயநாடு தொகுதி மக்களுக்கானது. இடதுசாரி மாணவர்கள் அடித்து நொறுக்கியது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும். வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளைத் தீர்க்காது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது தனக்கு எந்த கோபமோ,குரோதமோ இல்லை என்றார்.


Next Story