இந்தியா - நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்தியா - நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 31 Aug 2022 6:39 PM IST (Updated: 31 Aug 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

பல்லுயிர் பாதுகாப்புத் துறையில் இந்தியா - நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.

புதுடெல்லி:

இரு நாடுகளுக்கிடையே அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது என்ற கண்ணோட்டத்துடன், நேபாள அரசுடன் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்மொழிவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வனங்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு தரப்பினரிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.


Next Story