மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்..!


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்..!
x

ஜி.எஸ்.டி கவுன்சிலின் 50-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டிற்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு பெரும்பான்மையாக பரிந்துரை வழங்கியது. இது குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான இறக்குமதி , மருந்துகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்களிப்பது உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.


Next Story