மத்திய அரசின் சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு


மத்திய அரசின் சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு
x
தினத்தந்தி 2 July 2023 10:15 PM GMT (Updated: 2 July 2023 10:16 PM GMT)

சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் தலைமை வக்கீல்கள் வரிசையில் அட்டார்னி ஜெனரலுக்கு அடுத்தபடியாக சாலிசிட்டர் ஜெனரல் பதவி உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் சாலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ம் தேதி மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இவரது பதவிக்காலம் 2 முறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. துஷார் மேத்தா, பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவராக கருதப்படுபவர். முக்கியமான பல்வேறு வழக்குகளில் மத்திய அரசுக்காக வாதாடி உள்ளார். குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தபோது, அவரது அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story