காலாவதியான மற்றும் பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற மத்திய அரசு முடிவு - மந்திரி கிரண் ரிஜிஜு


காலாவதியான மற்றும் பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற மத்திய அரசு முடிவு - மந்திரி கிரண் ரிஜிஜு
x

காலாவதியான பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற முடிவு செய்துள்ளோம் என்று மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.

ஷில்லாங்க்,

காலாவதியான மற்றும் பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற முடிவு செய்துள்ளோம் என்று மத்திய சட்டத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.

இது குறித்து மந்திரி கிரண் ரிஜிஜு ஷில்லாங்கில் இன்று கூறுகையில், "சில பழைய சட்டங்கள் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக செயல்படுகின்றன. மேலும் மக்கள் மீதான இணக்க சுமையை நாம் குறைக்க வேண்டும்.

சாமானிய மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் குறைந்தபட்ச ஆட்சி இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி விரும்புகிறார்.தேவையற்ற சட்டங்கள் சாமானியர்களுக்கு சுமையாக இருப்பதால் குறைக்கப்பட வேண்டும். ஏற்கனவே 1500க்கும் மேற்பட்ட சட்டங்களை நீக்கியுள்ளோம்.

இன்றைய காலகட்டத்தில் எந்தப் பொருத்தமும் இல்லாமல் விளங்கும் சில காலாவதியான மற்றும் பழமையான சட்டங்கள் அனைத்தையும் அகற்ற முடிவு செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த வாரம் நடந்த அனைத்து இந்திய சட்ட மந்திரிகள் மற்றும் செயலாளர்களுடனான நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் பின்னடைவு ஏற்படுத்த கூடிய காலனியாதிக்க சட்டங்களை நீக்கி, சட்டங்கள் எளிய முறையில் மற்றும் வட்டார மொழிகளில் இயற்றப்பட வேண்டும். அப்படி செய்யும்போது, ஏழைகளிலும் உரிமைகள் மறுக்கப்பட கூடிய மிக ஏழை கூட புதிய சட்டங்களை பற்றி நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story