ஆஸ்திரேலிய புதிய வெளியுறவு மந்திரிக்கு, மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து


ஆஸ்திரேலிய புதிய வெளியுறவு மந்திரிக்கு, மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
x

ஆஸ்திரேலியாவின் புதிய வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்ட பென்னி வாங்குக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொது தேர்தல் கடந்த 21ந்தேதி நடந்தது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அதிக இடங்களை கைப்பற்றிய நார்மன் பிரதமராக தேர்வானார்.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் முறைப்படி கேன்பர்ரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று காலை பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் ஜெனரல் டேவிட் ஹர்லி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் 31வது பிரதமர் ஆன நார்மனுடன் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் புதிதாக மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர். அவர்களில் பென்னி வாங் அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியாவின் புதிய பெண் வெளியுறவு மந்திரியாக நியமிக்கப்பட்ட பென்னி வாங்குக்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய நல்லுறவுக்கு உங்களை ஒரு நீண்டகால உற்ற தோழராக நாங்கள் நன்றாகவே அறிவோம். உங்களை விரைவில் சந்திக்க எதிர்பார்த்து இருக்கிறேன் என அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story