தேசியக் கொடி ஏற்ற மேற்கு வங்காள அரசு அனுமதிக்கவில்லை: மத்திய மந்திரி குற்றச்சாட்டு


தேசியக் கொடி ஏற்ற மேற்கு வங்காள அரசு அனுமதிக்கவில்லை: மத்திய மந்திரி குற்றச்சாட்டு
x

image Courtacy: ANI

சீர்திருத்த இல்லத்தில் தேசியக் கொடி ஏற்ற மேற்கு வங்காள அரசு அனுமதிக்கவில்லை என்று மத்திய மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், மேற்கு வங்காளத்தில் பஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள மத்திய சீர்திருத்த இல்லத்துக்கு சென்றார். அதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் சீர்திருத்த இல்லத்துக்குள் நுழைந்தபோது, அங்கு தேசியக் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததை அறிந்தேன். நான் வரும் தகவல், மாநில அரசு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. நானும் தலைமை செயலாளரிடம் பேசினேன்.

அப்படி இருந்தும் நான் தேசியக் கொடி ஏற்றுவதை மாநில அரசு அனுமதிக்கவில்லை. நான் சீர்திருத்த இல்ல நிர்வாகிகளை குறை சொல்லவில்லை. அவர்கள் மாநில அரசின் உத்தரவை பின்பற்றி உள்ளனர். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மதிப்பதில் மாநில அரசின் அக்கறையின்மையை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'எங்கு பார்த்தாலும் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக' தெரிவித்தார்.


Next Story