மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் அரசியல் கட்சிகளுக்கு ஐக்கிய ஜனதா தளம் வேண்டுகோள்


மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் அரசியல் கட்சிகளுக்கு ஐக்கிய ஜனதா தளம் வேண்டுகோள்
x

மக்களவைத் தொகுதி மைன்புரிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

சமாஜ்வாடி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான முலாயம்சிங் யாதவ் சமீபத்தில் மரணம் அடைந்தார். அதனால் காலியான அவரது மக்களவைத் தொகுதி மைன்புரிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். இவர் முலாம்சிங் யாதவின் மருமகளும், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் ஆவார்.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், 'விவசாயிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் மிகப்பெரிய தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆவர். அவரது பணியை பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடியின் டிம்பிள் யாதவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம், அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம். அது முலாயம்சிங்குக்கு அளிக்கப்படும் உண்மையான மரியாதையாக இருக்கும். எங்கள் ஐக்கிய ஜனதா தளத்தின் சார்பிலும் டிம்பிள் யாதவுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story