உ.பி. சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன; டெல்லி-ஹவுரா ரெயில் சேவை பாதிப்பு


உ.பி. சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன; டெல்லி-ஹவுரா ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2022 2:12 PM IST (Updated: 23 Oct 2022 2:22 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டதில், டெல்லியில் இருந்து ஹவுரா செல்லும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.



கான்பூர்,


உத்தர பிரதேசத்தில் பதேப்பூர் பகுதியருகே ராம்வான் ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் ஒன்று இன்று காலை 10.30 மணியளவில் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில், திடீரென 7 பெட்டிகள் தடம் புரண்டு சரக்கு ரெயில் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, அருகேயிருந்த தண்டவாளத்திலும் விழுந்துள்ளன. இதனால், அந்த வழியே செல்லும், வரும் ரெயில்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து ஹவுரா செல்லும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, ரெயில்வே ஊழியர்கள் நிலைமையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று மாலைக்குள் நிலைமை சீரடையும் என பொறியியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story