மூடுபனி காரணமாக சாலையைக் கடக்கும் போது டிரக் மோதி 7 வயது சிறுவன் உயிரிழப்பு


மூடுபனி காரணமாக சாலையைக் கடக்கும் போது டிரக் மோதி 7 வயது சிறுவன் உயிரிழப்பு
x

அடர்ந்த மூடுபனி காரணமாக சாலையைக் கடக்கும் போது டிரக் மோதியதில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்தான்.

எட்டாவா,

உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தின் பிரண்ட்ஸ் காலனி காவல் நிலையப் பகுதியில் நேற்று அடர்ந்த மூடுபனி காரணமாக சாலையைக் கடக்கும் போது டிரக் மோதியதில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்தான்.

நேற்று காலையில் உதய்புரா கிராமத்தில் சுஷாந்த் குமார் என்ற 7 வயது சிறுவன் மீது லாரி மோதியது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல மணி நேரங்களுக்குப் பிறகு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டிரக் டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story