அயோத்தியில் ராம ஜென்மபூமி வளாகத்தை பார்வையிட்ட யோகி ஆதித்யநாத்


அயோத்தியில் ராம ஜென்மபூமி வளாகத்தை பார்வையிட்ட யோகி ஆதித்யநாத்
x

Image Courtacy: PTI

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி வளாகத்தை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார்.

லக்னோ,

ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பையடுத்து அயோத்தியில் ராமா் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற பூமி பூஜையைத் தொடா்ந்து ராமா் கோவில் கட்டும் பணி தொடங்கியது. 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமா் கோவிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி வளாகத்திற்குச் சென்று, அங்கிருக்கும் தொழிலாளர்களின் நலம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருக்கும் அனுமன்கர்ஹி கோவிலுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்தார்.

இந்த ஆய்வின்போது முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துடன், ராமஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்,

ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளநிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story