உ.பி.யில் கொடூரம்: வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட வாலிபர்!


உ.பி.யில் கொடூரம்: வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்ட வாலிபர்!
x

உத்தரபிரதேசத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நாக்லா ஷிஷாம் கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் தீட்சித் கூறுகையில்:-

சம்பவத்தன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை வேலை நிமித்தமாக மெயின்புரிக்கு சென்றிருந்த நிலையில், பெண்ணின் தாய் ஆக்ராவிற்கு சென்றிருந்தார். சம்பவம் இடம்பெற்ற போது மாணவி வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இந்த் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். அதன்பின், பெண்ணின் சடலத்தை அவரது வீட்டில் தூக்கில் தொங்கவிட்டுச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் இளைய சகோதரி பயிற்சி வகுப்பிலிருந்து மாலை வீடு திரும்பினார். அப்போது அவர் ஜன்னல் வழியாக இந்த கொடூரத்தை பார்த்தார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அங்கு உயிரிழந்தவரின் சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புஷ்பேந்திரா என்ற 20 வயது இளைஞர், தன் சகோதரியை கழுத்தை நெரித்து கொன்றதை, தான் நேரில் பார்த்ததாகவும், தன்னை பார்த்ததும் அவர் வீட்டிலிருந்து வெளியேறி ஓடினார் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் இளைய சகோதரி போலீசிடம் கூறினார்.

விரைவில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் கமலேஷ் தீட்சித் தெரிவித்தார்.

இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story