சீனாவில் இருந்து இந்தியா வந்த நபருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்டார்...!


சீனாவில் இருந்து இந்தியா வந்த நபருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்டார்...!
x

Image Courtesy: AFP

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது.

லக்னோ,

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை உருமாற்றம் சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் இந்தியாவில் நிலைமையை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 23-ம் தேதி சீனாவில் இருந்து திரும்பிய 40 வயதான அந்த நபருக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில் சீனாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.

சீனாவில் அதிகரித்து வரும் பிஎப்.7 கொரோனா தொற்று மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. .இந்த நிலையில் சீனாவில் இருந்து ஆக்ரா வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிகப்பட்டு ஒமைக்ரான் பிஎப்7 வகை கொரோனா தொற்றா? என்று மரபணு சோதனை நடத்த ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவிலேயே ஆக்ரா நபருக்கு பாதிக்கப்பட்டது அதிக வீரியம் கொண்ட பிஎப்.7 ரக வைரசா? இல்லையா என்பது தெரியவரும்.


Next Story