உ.பி.: ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 14 பேர் மீட்பு


உ.பி.:  ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; 14 பேர் மீட்பு
x

உத்தர பிரதேசத்தில் டிராக்டர் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 14 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

ஹர்தோய்,



உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் பெக்ராஜ்பூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அருகேயுள்ள சந்தைக்கு சென்று விற்று விட்டு டிராக்டர் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த வாகனம் பாலி பகுதியில் கர்ரா ஆற்று பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தபோது, டிராக்டரின் சக்கரம் ஒன்று கழன்று போயுள்ளது. இதனை தொடர்ந்து, டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 24 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் வெள்ள மீட்பு பணி குழுக்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

14 பேர் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் மீட்கப்பட்டு உள்ளனர். முகேஷ் என்பவரது உடல் மீட்கப்பட்டு உள்ளது. 5 பேரை தேடும் பணி தொடர்கிறது என ஹர்தோய் மாவட்ட மாஜிஸ்திரேட் அவினாஷ் குமார் கூறியுள்ளார்.

ஆற்றில் இருந்து டிராக்டர் மீட்கப்பட்டு உள்ளது. அனைவரும் மீட்கப்படும் வரை மீட்பு பணி தொடரும் என அவர் கூறியுள்ளார்.


Next Story