உ.பி.: தன்னை கடித்த வளர்ப்பு நாயை கொன்று, வீச சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி...
உத்தர பிரதேசத்தில் தன்னையும், குழந்தையையும் கடித்தது என கூறி வளர்ப்பு நாயை கொன்று, அதனை ஏரியில் வீச சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் வசித்து வந்தவர் ரூபி. இவர் நாய் ஒன்றை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், தன்னையும், தனது குழந்தையையும் நாய் கடித்து விட்டது என கூறி வளர்ப்பு நாயை கொலை செய்து உள்ளார்.
இதன்பின்பு, அதனை ஏரியில் வீசுவதற்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரம் சென்றும் மனைவி வீடு திரும்பவில்லை. இதனால், பதறி போன ரூபியின் கணவர் ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். ஏரி கரையில் ரூபியின் ஜோடி காலணிகள் கிடந்துள்ளன.
இதனை தொடர்ந்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன் நீரில் மூழ்கிய ரூபியை அவரது கணவர் மீட்டுள்ளார். போலீசுக்கும் தகவல் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி கிழக்கு மண்டல ஏ.டி.சி.பி. சையது அலி அப்பாஸ், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். உடலை பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்து உள்ளார். அதன் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.