நடுரோட்டில் கட்டிபிடித்தபடி பைக்கில் சென்ற காதல்ஜோடி வீடியோ
ஜோடி மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரோட்டில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காகநடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
லக்னோ
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் மோட்டார் சைக்கிளில் வாலிபரும் இளம் பெண்ணும் கட்டிபிடித்தபடி சென்ற வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கினர். லக்னோ மத்திய மண்டலத்தின் துணை போலீஸ் கமிஷனர் அபர்ணா ரஜத் கவுசிக், இந்த வீடியோ லக்னோவில் இருந்து ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த ஜோடிய தேட இரண்டு சிறப்பு படைகள் அமைக்கபட்டு உள்ளன. அவர்களை பிடிக்க அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஜோடி மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரோட்டில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காகநடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
"வீடியோவில் காணப்பட்ட ஜோடி இரண்டு பேரும் பெண்கள் என்றும் முழு சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் கூறி உள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவ் கூறினார்.