வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்...! வலியால் அலறி துடித்த வாலிபர்...!


வலுக்கட்டாயமாக கிஸ் கேட்டதால்  உதட்டை கடித்து துப்பிய இளம்பெண்...! வலியால் அலறி துடித்த வாலிபர்...!
x

பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் தந்திரமாக செயல்பட்டுள்ளார்.

மீரட்,

நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் எதாவது ஒரு இடத்தில் அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. இது குறித்த தகவல்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதுபோன்ற கொடுமையான பலாத்கார சம்பவங்களால் ஒருபக்கம் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்து போகிறது. மறுபக்கம் பல பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என்பது வேதனையளிக்க கூடிய ஒரு செயலாக உள்ளது.

இந்நிலையில் பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் தந்திரமாக செயல்பட்டுள்ளார். உ.பி மாநிலம் மீரட்டில் இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட, அந்த பெண், இளைஞரின் உதடுகளை கடித்து துப்பியுள்ளார். இதையடுத்து பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து அவரை காப்பாற்றினர். மேலும், ரத்த வெள்ளத்தில் துடித்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடந்த 4-ம் தேதி, வயல் வேலைக்குச் சென்ற போது குற்றவாளி தொடர்ந்து பின் தொடர்ந்து வந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆடைகளை களைத்து அத்து மீற முயன்றார். அப்போது சுதாரித்துக்கொண்ட பெண் முதலில் முத்தம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய வாலிபர் முத்தம் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். அந்த இளம்பெண் முத்தம் கொடுக்க முயன்ற போது வாலிபரின் உதட்டை பதம் பார்த்து விட்டார். இதையடுத்து பெண்ணின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து அவரை காப்பாற்றி விட்டனர். வாலிபர் வலியால் அலறி துடித்தார். உதட்டில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இளம்பெண்ணின் புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story