உத்தரபிரதேசம்: ரெயில் நிலையத்தை திணறடித்த இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ
உத்தரபிரதேசத்தில் அரசு பணிக்கு தேர்வு எழுத சென்றவர்கள் ரெயில் ஜன்னல்களில் அமர்ந்து பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் அரசு பணிகளுக்கான பெட் தேர்வின் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவின் முதல்நிலை தேர்வுகள் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதி வருகின்றனர்.
நேற்று தேர்வு எழுத சென்ற இளைஞர்கள், காலை தேர்வு முடிந்ததும் மாலையில் சீதாபூர் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அங்கு போதிய ரெயில்சேவை இல்லாததால், ஒரே ரெயிலில் ஏராளமானோர் ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு பயணித்தனர். சிலர் ரெயிலின் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்த படி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு, பஸ் மற்றும் ரெயில் சேவைக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும், ரெயில் புறப்படும் நேரம் குறித்த சரியான அறிவிப்பு இல்லை என்றும் இளைஞர்கள் குற்றம்சாட்டினர்.
Related Tags :
Next Story