உத்தர பிரதேசம்: நண்பரின் காதில் போதையில் சிறுநீர் கழித்த நபர்


உத்தர பிரதேசம்:  நண்பரின் காதில் போதையில் சிறுநீர் கழித்த நபர்
x

உத்தர பிரதேசத்தில் போதையில் நண்பரின் காதில் சிறுநீர் கழித்த நபர் பற்றிய வீடியோ வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் ஜவகர் பட்டேல் மற்றும் குலாப் கோல். சோன்பத்ரா மாவட்டத்தில் ஜுகெயில் பகுதியில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக மதுபானம் குடித்து உள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், நண்பரான குலாப் கோலின் காதில் ஜவகர் பட்டேல் சிறுநீர் கழித்து உள்ளார். ஆனால், போதையில் இருந்த குலாப்புக்கு என்ன நடந்தது என தெரியவில்லை.

எனினும், யாரோ சிலர் இதனை வீடியோவாக எடுத்து, சமூக ஊடகத்தில் பரவ விட்டு உள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், ஜவகர் பட்டேல் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தஷ்மத் ரவத் என்ற பழங்குடியின் நபரின் மீது சிறுநீர் கழித்ததற்காக பிரவேஷ் சுக்லா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

வீடியோ வைரலானதும், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இதனை தொடர்ந்து, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், ரவத்தின் கால்களை கழுவினார்.


Next Story